1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 22 செப்டம்பர் 2021 (10:14 IST)

சென்னையில் கடத்தப்பட்ட குழந்தை… நாக்பூரில் கண்டுபிடிப்பு!

பீஹார் மாநில தம்பதிகள் தங்கள் குழந்தைகளோடு சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகள் மிதிலேஷ் குமார் மற்றும் துர்கா தேவி. இவர்கள் சென்னை அம்பத்தூர் பகுதியில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு விஷ்ணு மற்றும் ஷ்யாம் என இரு மகன்கள் இருந்துள்ளனர். இவர்கள் வீட்டின் மேல் பகுதியில் மத்திய பிரதேச பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் சோனு என்ற இரு இளைஞர்கள் வசித்து வந்துள்ளனர்.

மிதிலேஷ் குமார் மற்றும் துர்கா தேவி ஆகிய இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டதால் வீட்டில் குழந்தைகள் தனியாக இருந்துள்ளனர். இந்நிலையில் விஷ்ணுவுக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக சொல்லி சோனு மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரும் கடத்திச் சென்றுள்ளனர்.

இதையறிந்த பெற்றோர், அம்பத்தூர் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்க, இது சம்மந்தமாக விசாரணையில் இறங்கிய போலிஸார் அவர்கள் ரயிலில் குழந்தையை கடத்திச் செல்வதை கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் நாக்பூர் பகுதியில் அவர்கள் இருவரையும் கைது செய்து குழந்தையை மீட்டுள்ளனர். இப்போது அவர்கள் விசாரணைக்காக புழல் சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.