வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (19:55 IST)

ஆர்யன்கான் குறித்த பொதுநல வழக்கு: நீதிமன்றம் எச்சரிக்கை!

aryan khan
பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்தவருக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் சொகுசு கப்பலில் சென்ற போது போதை பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்
 
இதனை அடுத்து அவர் போதை பொருள் வைத்திருந்ததற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இந்த நிலையில் விடுதலை செய்ததை எதிர்த்து பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் விளம்பரத்துக்காக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் இதுபோன்ற வழக்கை பொதுநல வழக்கை தாக்கல் செய்பவர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் என்று மும்பை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran