1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 22 டிசம்பர் 2022 (14:16 IST)

கமல் பட நடிகைக்க்கு பிடிவாரண்ட்: நீதிமன்றம் உத்தரவு

jayapradha
கமலஹாசன் நடித்த சலங்கை ஒலி, தசாவதாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ஜெயப்ரதாவுக்கு உத்தரப்பிரதேச மாநில நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
நடிகை ஜெயபிரதா உத்தரப் பிரதேச மாநில ராம்பூர் என்ற தொகுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டார்
 
ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த நிலையில்  நடிகை ஜெயப்பிரதா தேர்தல் பிரசாரத்தின்போது விதிமுறைகளை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது.
 
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று விசாரணைக்கு ஜெயப்பிரதா ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரன்ட்டை நீதிபதி பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran