கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட காதல் தம்பதிகள் – மீண்டும் ஆணவக்கொலையா ?

Last Modified சனி, 9 நவம்பர் 2019 (08:15 IST)
கர்நாடக மாநிலத்தில் கடக் எனும் பகுதியில் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டு 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஊருக்குள் வந்த தம்பதிகள் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதிகளான ரமேஷ் மாதர் மற்றும் கங்கவ்வா பல இடங்களில் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இவர்கள் 4 ஆண்டுகளுக்கு முன்னர் சாதி மறுத்துக் காதல் திருமணம் செய்து கொண்டதே ஊர் ஊராக அலைவதற்குக் காரணம்.  ஒரே ஊரைச் சேர்ந்த இருவரும் வேறு வேறு சாதி என்பதால் அவர்கள் காதலுக்கு இருவீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் 4 ஆண்டுகள் கழித்து அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர். அப்போது அவர்களைக் கவனித்த சிலர் அவர்களைக் கல்லால் தாக்கிக் கொலை செய்துள்ளனர். இது சம்மந்தமாக ரமேஷின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பெண்ணின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இது சொந்தப்பகை காரணமாக நடந்த கொலை எனவும் ஆணவக்கொலை இல்லை எனவும் போலிஸ் தரப்பு மறுத்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :