தாய்க்கு துரோகம் செய்த தந்தை – பொறுக்க முடியாத மகன் செய்த கொடூரம் !
கரூர் அருகே வேறொரு பெண்ணோடு தொடர்பு வைத்துக்கொண்டு தாயைக் கொடுமைப் படுத்திய தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ரங்கசாமி. இவருக்குக் கவிதா என்ற மனைவியும் கவிதா மற்றும் மகன் அஸ்வினும் உள்ளனர். இந்நிலையில் ரங்கசாமிக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அவரது மனைவி கவிதா ரங்கசாமியைக் கண்டிக்க இது தொடர்பாக அவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. தினமும் மது அருந்திவிட்டு மனைவியைத் தாக்கியுள்ளார் ரங்கசாமி.
தாய்க்கு நிகழும் கொடுமைகளைப் பார்த்த மகன் அஸ்வின் தனது தந்தையைக் கொலை செய்ய திட்டமிட்டு தாயின் உதவியோடு வீட்டில் வைத்துக் கொலை செய்துள்ளார். அதன் பின் அவரது உடலை மறைப்பதற்காகக் காரில் ஏற்றி சென்றுள்ளனர். ஆனால் பாதி வழியிலேயே கார் பழுதாக பதட்டத்தில் காரை அப்படியே விட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து சென்றுள்ளனர்.
சாலையோரம் இருந்த காரைக் கண்டுபிடித்த போலிஸார், ரங்கசாமியின் மரணம் தொடர்பாக தாய் மற்றும் மகனிடம் நடத்திய விசாரணையில் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.