செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜனவரி 2020 (13:39 IST)

சீனாவில் கொரோனா வைரஸ் பலி அதிகரிப்பு: இந்தியா முன்னெச்சரிக்கை!

சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் அது இந்தியாவில் பரவாமல் இருக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவில் திடீரென பரவியுள்ள கொரோனா வைரஸால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை தொடர்ந்து தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவி விடாமல் இருக்க இந்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சீனாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கு பல்வேறு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கோரனா வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்பதை அறிய சீன மருத்துவ நிபுணர்கள் விலங்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வைரஸ் குறித்த மேலதிக விவரங்களை புனே தேசிய வைராலஜி நிறுவனம் ஆராய்ச்சி செய்து வருகிறது.

இது மற்றொரு வகை நிம்மோனியா காய்ச்சல் என்று மருத்துவர்கள் கூறி வரும் நிலையில் இந்த நோய் தொற்று காற்றில் பரவும் தன்மையுடையது என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.