தோனி ஒப்பந்தம் மறுக்கப்படட்து ஏன் ? – பின்னணியில் பாஜகவா ?

Last Modified திங்கள், 20 ஜனவரி 2020 (14:40 IST)
பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் பிசிசிஐ ஒப்பந்தம் மறுக்கப்பட்டதன் பின்னணியில் பாஜக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பிசிசிஐ அக்டோபர் 2019 - செப்டம்பர் 2020 வருடாந்திர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தோனியின் பெயர் இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்திய அணியில் அவர் எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் தோனியின் இந்த ஒப்பந்த நீக்கத்தின் பின்னணியில் பாஜக இருப்பதாக அஷோக் ஸ்வெய்ன் என்ற பேராசிரியர் தெரிவித்துள்ளார். தனது டிவிட்டில் ‘ தோனியை ஒரு கேப்டனாகவும் கிரிக்கெட்டராகவும் மறந்து விடுங்கள். அவர் தனது தேச பக்தியைக் காட்ட ராணுவத்தில் சேர்ந்தது. ராணுவத் தொப்பியை அணிந்தது. ராணுவச் சின்னத்தை கிளவுஸில் அணிந்தது என பலவற்றையும் செய்துவிட்டார். ஆனால் அவர் ஜார்கண்ட் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யாததால் அவர் தனது ஒப்பந்தத்தை இழந்துள்ளார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இந்த டிவீட் சமூக வலைதளங்களில் இப்போது பரவி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :