1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona virus crisis india wide

67 ஆயிரத்தை தாண்டிய கொரோனா! – மாநிலங்களின் நிலவரம்!

India
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மூன்றாவது  கட்ட ஊரடங்கும் முடிவடைய உள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67,152 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 2,206 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 20,917 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,171 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 832 பேர் பலியான நிலையில் 4,199 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத்தில் 8,194 பேரும், டெல்லியில் 6,923 பேரும், ராஜஸ்தானில் 3,814 பேரும், மத்திய பிரதேசத்தில் 3,614 பேரும், தமிழகத்தில் 7,204 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அமைச்சரை கலாய்த்த அமமுக நிர்வாகி கைது! – டிடிவி தினகரன் கண்டனம்!