வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 மே 2020 (08:28 IST)

டாஸ்மாக்கில் சரக்கு திருடிய டாஸ்மாக் ஊழியர்: கைது செய்த போலீஸார்!

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் டாஸ்மாக் ஊழியர் ஒருவரே மதுபானங்களை திருடி விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கடந்த 7ம் தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. தொடர்ந்து இரண்டு நாட்களில் 100 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டிய நிலையில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதைதொடர்ந்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இரண்டு நாட்கள் திறக்கப்பட்டுவிட்டு மீண்டும் மூடப்பட்டதால் பிறகு வாங்கி கொள்ளலாம் என அலட்சியமாக இருந்த மதுப்பிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் திருச்சி துவாக்குடி அருகே உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரியும் கார்த்திகேயன் என்பவர் தான் பணிபுரியும் டாஸ்மாக் கடையிலிருந்தே மது பாட்டில்களை திருடி வெளியே அதிக விலைக்கு விற்றுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் மேற்பார்வையாளர் கார்த்திக்கேயனை கைது செய்ததுடன், விற்றது போக அவரிடம் எஞ்சியிருந்த 100க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.