மக்களுக்கு இலவச சோப் குடுங்க; பாட்டு போடுங்க! – ராமதாஸ் வேண்டுகோள்!
கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் அரசு இதுகுறித்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில், டெல்லியில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். கொரோனா பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
முக்கியமாக கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கையை அடிக்கடி கழுவ சொல்லி வலியுறுத்தப்படுகிறது. ஆனால் சோப்பு வாங்க வசதியில்லாத மக்கள் எப்படி அடிக்கடி கையை கழுவ முடியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அதனால் மக்களுக்கு கைகழுவ அரசு இலவச சோப்பு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
சான்பிரான்சிஸ்கோ போன்ற நகரங்களில் பொது இடங்களில் கை கழுவும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இருபது வினாடிகளுக்கு ஒலிபரப்பாகும் பாடலை கேட்டப்படியே மக்கள் கைகளை கழுவிக் கொள்கிறார்கள். இதை குறிப்பிட்டு இதே போல தமிழகத்திலும் பொது இடங்களில் மக்கள் கைக்கழுவ இடங்கள் அமைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.