வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 14 மார்ச் 2020 (14:15 IST)

குடும்பக் கட்டுப்பாடு செய்து கர்ப்பமான பெண்.. கருவை கலைக்க மனு !

மதுரை மாவட்டம் அவனியாபுரம் மேட்டுத் தெருவில் வசிப்பவர் ராக்கு. இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
 
அதில், எனக்கு திருமணம் ஆகி 3 மகள்களும் மகனும் உள்ளனர். எனவே, கடந்த 2014 ஆம் வருடம் ஏப்ரல் 17 ஆம் தேதி நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டேன். இதனையடுத்து சில மாதங்களுக்கு முன் என் வயிறு வலி ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு சென்ற இதைக் கூறினேன். என்னை  பரிசோதனை செய்த மருத்துவர்கள் நான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
 
எனக்கு 35 ஆகிறது. இனிவரும் காலத்தில் எனக்கு பிரசவம் என்பது என்னால் முடியாது.அத்துடன், கணவரின் சம்பளம் முழுவதும் என் குழந்தைகளின் படிப்பிற்கு அதிகம் செலவாகிறது.எனவே எனது 13 வார கருவைக் கலைக்க அனுமதியும் உரிய இழப்பீடும் தர உத்தரவிட வேண்டுமென  கூறியிருந்தார்.
 
இந்த மனு மீதான விசாரனையின் போது, மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில்,குழந்தைகளின் கல்விக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
 
மேலும், மனுதாரரின் குடும்பத்திற்கு உரிய உதவிகள் வழங்கவும், அவரது கணவருக்கு அரசு வேலை வழங்க முடியுமா என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கூறி, இவ்விசாரணையை வரும் 30 தேதிக்கு ஒத்தி  வைத்தார்.