ரூ.700 - 1000 வரை விற்கப்படும் கொரோனா தடுப்பூசி ?

Sugapriya Prakash| Last Modified புதன், 21 ஏப்ரல் 2021 (13:08 IST)
 
 
இந்தியா முழுவதும் வெளிச்சந்தையில் கொரோனா தடுப்பூசி விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியா முழுவதும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் அவசர கால தடுப்பூசியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
இதில் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ் ரூ.250 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அதன் விலையை சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என்றும், மாநில அரசுகளுக்கு ரூ.400 என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே, வெளிச்சந்தையில் கொரோனா தடுப்பூசி விற்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அப்படி விற்பனைக்கு வந்தால் ஒரு டோஸ் 700 - 1000 ரூபாய் வரை விற்பனை ஆகும் என தெரிகிறது. இதே போல ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ரூ.750 என்ற விலையில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :