1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona third wave not seriously affect in india

இந்தியாவில் மூன்றாவது அலை வந்தாலும் மோசமாக இருக்காது! – மருத்துவ நிபுணர்கள் கணிப்பு!

India
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை உருவாகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில் அதன் பாதிப்புகள் குறைவாகவே இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் பரவிய நிலையில் பாதிப்பு எண்ணிக்கை, பலி எண்ணிக்கை ஆகியவை வேகமாக அதிகரித்தன. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மூன்றாவது அலை தொடங்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது வரை கொரோனா பாதிப்புகள் இந்தியாவில் குறைந்து கொண்டே வருவதால் மூன்றாவது அலை உருவாக வாய்ப்புகள் குறைவாக உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாறு மூன்றாவது அலை உருவானாலும் அதனால் மோசமான பாதிப்புகள் எதுவும் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அரசு பசுமை பண்ணைகளில் குறைந்த விலைக்கு தக்காளி! – படையெடுக்கும் மக்கள்!