வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 24 நவம்பர் 2021 (08:04 IST)

இந்தியாவுக்கு இயற்கை பேரிடர்: தயாராக இருக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

இந்தியாவில் வரும் ஆண்டுகளில் பெரும் இயற்கை பேரிடர்களை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என பருவநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பருவமழை மாறுதல் காரணமாக அதிகப்படியாக கடல்மட்டம் உயர்தல் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல் மற்றும் கடும் வறட்சி ஆகிய இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள இந்தியா தயாராக இருக்க வேண்டும் என பருவநிலை ஆய்வாளர்கள் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
 
வரும் 2050ஆம் ஆண்டில் 15 முதல் 20 சென்டி மீட்டர் அளவுக்கு கடல் மட்டம் மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய கடலோர பகுதிகளில் புவியியல் அமைப்பை மாறும் அபாயம் இருப்பதாகவும் பருவநிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது