1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona daily cases drop down under 50 thousand

30 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்பு; 45 ஆயிரமாக அதிகரித்த டிஸ்சார்ஜ் – இந்தியாவில் கொரோனா!

India
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் குறைந்து வருவதால் தினசரி பாதிப்புகள் 30 ஆயிரமாக குறைந்துள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 30,093 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,11,74,322 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 499 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  4,14,482 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,03,53,710 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 4,14,482 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
அமெரிக்க காட்டுத்தீ - 3 லட்சம் ஏக்கர் காடுகள் நாசம்