ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 20 ஜூலை 2021 (08:50 IST)

எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தற்போது கர்ப்பிணிகள் உள்பட அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தி வரும் நிலையில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு சார்பில் கேட்டுக் கொண்டது என்பதும் அதேபோல் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் அனைத்து நாடுகளும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது
 
இதன் அடிப்படையில் தமிழகத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தும் முறை தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் 7 சதவீதம் தமிழகத்தில் தான் உள்ளனர் என்பதால் தமிழகத்தில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி செல்லுதல் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது
 
அதனடிப்படையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக தடுப்பூசி செலுத்த முன் வரலாம் என்றும் அவர்களுக்கு உரிய முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது