தொடர்புடைய செய்திகள்
- ருத்ர தாண்டவம் டிரெய்லரைப் பகிர்ந்த ஹெச் ராஜா!
- ஆப்கானிஸ்தானிலிருந்து வந்தவர்களுக்கு அதிகரிக்கும் கொரோனா! – தனிமைப்படுத்தல் தீவிரம்!
- ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடலைன்னாலும் பள்ளி மூடல்! – ஆட்சியர் அதிரடி உத்தரவு!
- ”இந்தியாவை எதிர்க்க தலீபான்களோடு கை கோர்ப்போம்??” – பாகிஸ்தான் அரசியல் தலைவர் சர்ச்சை பேச்சு!
- தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களும் திறப்பு! – வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!
37 ஆயிரமாக உயர்ந்த தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!
இந்தியாவில் கடந்த சில வாரங்களில் இரண்டாம் அலை கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 37,593 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 3,25,12,366 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 648 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,31,642 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,17,54,281 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 3,22,327 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
