வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 ஆகஸ்ட் 2021 (08:34 IST)

தமிழகத்தில் அங்கன்வாடி மையங்களும் திறப்பு! – வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை தொடர்ந்து அங்கன்வாடி மையங்களையும் திறக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் திறக்கப்படும் நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அங்கன்வாடி மையங்களையும் திறக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, செப்டம்பர் 1 முதல் அங்கன்வாடி மையங்களில் சூடான சத்துணவு வழங்க வேண்டும்.

காலாவதியான தரமற்ற உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது

மூக்கு, கண், காதுகளை சொறிதல், எச்சில் துப்புதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.

2 முதல் 6 வயது வரையிலான குழந்தைகள் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.