செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (09:28 IST)

டெல்லி மட்டுமா இந்தியாவில் இந்த நகரங்களிலும் மோசமான காற்றின் தரம்

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் டெல்லியோடு இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் மோசமான காற்றின் தரம் பதிவாகியுள்ளது என தகவல். 

 
கடந்த சில நாட்களாக டெல்லியில் படுமோசமாக காற்று மாசுபாடு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தீபாவளிக்குப் பின்னர் மோசமான காற்று மாசால் தலைநகர் டெல்லி தவித்து வருகிறது. இதனை அடுத்து பள்ளி கல்லூரிகளை ஒரு வாரம் மூடவும் அலுவலங்களுக்கு செல்வோர் வீட்டில் இருந்து வேலை செய்யவும் அறிவுறுத்தப்பட்டது. 
 
இந்நிலையில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் டெல்லியோடு இந்தியாவில் எந்தெந்த நகரங்களில் மோசமான காற்றின் தரம் பதிவாகியுள்ளது என தகவல் வெளியிட்டுள்ளது. அதில், சர்க்கி தாத்ரி, தருஹேரா, ஃபரிதாபாத், ஃபதேஹாபாத், காசியாபாத், குருகிராம், ஹாபூர், ஹிசார், கட்னி, கோட்டா, மண்டிகேரா, மீரட், மொராதாபாத், மோதிஹாரி, முசாபர்நகர், நர்னால், நொய்டா மற்றும் பானிபட் உள்ளிட்ட நகரங்களிலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.