1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Corona cases in India decreases

சரியும் தினசரி பாதிப்பு; ஆயிரத்திற்கும் மேல் பதிவாகும் மரணங்கள் – இந்தியாவில் கொரோனா!

இந்தியா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கிய நிலையில் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களில் 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் குறையத் தொடங்கியுள்ளன. 
 
தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,27,952 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,20,80,664 ஆக உயர்ந்தது. மேலும் புதிதாக 1,059 பேர் இறந்துள்ளனர். இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,01,114 ஆக உயர்ந்தது.
 
கொரோனா தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,30,814 பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,02,47,902 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 13,31,648 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
இன்றும் உயர்ந்தது தங்கத்தின் விலை!