பயம்தான் காப்பாற்றும் என்றால் பயப்படுங்கள்… கொரோனா குறித்து அஸ்வின் கருத்து!

Last Modified திங்கள், 17 மே 2021 (08:43 IST)

கிரிக்கெட் வீரர் அஸ்வின் கொரோனா குறித்த பயம் அவசியம் எனக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் குடும்பத்தில் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் யாரும் உயிர்ச்சேதம் இன்றி குணமாகி வந்துள்ளனர். இந்நிலையில் அஸ்வின் இப்போது ‘பயம்தான் இப்போதுள்ள சூழலை மாற்றும் என்றால் தயவு செய்து பயப்படுங்கள்’ எனத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ‘கொரோனாவைக் குறித்து அச்சமூட்டும் செய்திகளைப் பரப்ப வேண்டாம் எனப் பலரும் கூறி வருகின்றனர். ஆனால் பயம்தான் இந்த சூழலை மாற்றும் என்றால் பயம் மக்களிடம் இருப்பது அவசியம்.
இந்த கொடிய வைரஸை எதிர்க்க இது ஒன்றுதான் வழி.’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :