1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Dinesh karthik signed as a commentator

வர்ணனையாளராக மாறும் தினேஷ் கார்த்திக்… அட இவங்களும் இருக்காங்களா?

தினேஷ் கார்த்திக்
இந்திய அணியின் வீரர் தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் நடக்க இருக்கும் தி ஹண்ட்ரட் தொடரில் வர்ணனையாளராக பணியாற்ற உள்ளார்.

இந்திய அணியில் மிக நீண்ட காலமாக தனக்கான இடத்துக்காக போராடியவர் தினேஷ் கார்த்திக். ஆனால் தோனியின் வரவால் தொடர்ச்சியான வாய்ப்புகளைப் பெறுவதில் அவருக்கு சிக்கல் எழுந்தது. இதனால் அவ்வப்போது இடம் கிடைப்பதும், பின்னர் அணிக்கு வெளியே உட்கார வைக்கப்படுவதாகவும் இருந்தார்.

ஐபிஎல் தொடர்களில் சிறப்பாக விளையாடிய இந்திய வீரர்களில் இவரும் ஒருவர். இப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் இப்போது இங்கிலாந்தில் நடக்க உள்ள தி ஹண்டரட் என்ற புதுமையான தொடரில் இவர் வர்ணனையாளராக பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளார். அவருடன், பிளிண்டாப், கெவின் பீட்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், டேரன் சமி உள்ளிட்டோரும் வர்ணனையாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
விலா எலும்பை பதம் பார்த்த அக்தரின் பந்து… 2 மாதங்கள் பட்ட பாட்டை பகிர்ந்த சச்சின்!