ஒரே படத்துக்கு இசையமைக்கும் தமன் & தேவி ஸ்ரீ பிரசாத்!

Last Modified திங்கள், 17 மே 2021 (09:12 IST)

தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் தமன் ஆகிய இருவரும் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் இசையமைக்க உள்ளனர்.

சமீபகாலமாக ஒரு படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இசையமைப்பாளர்கள் பணியாற்றுவது அதிகமாகியுள்ளது. தமிழில் யுவன் இளையராஜா கூட்டணியில் மாமனிதன் படம் உருவாகியுள்ளது. அதே போல கார்த்தியின் சுல்தான் படத்துக்கும் யுவன் பின்னணி இசையமைக்க விவேக் மெர்வின் பாடல்களுக்கு இசையமைத்தனர். அந்த போக்கு இப்போது தெலுங்கு சினிமாவிலும் பரவ தொடங்கியுள்ளது.

திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க இருக்கும் புதிய படத்தில் முன்னணி இசையமைப்பாளர்களான தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் தமன் ஆகிய இருவரும் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :