தொடர்புடைய செய்திகள்
- கொரோனாவால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்
- 76 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்த வெப்பநிலை! – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!
- பாலிவுட்டை பதம் பார்க்கும் கொரோனா! – நடிகை ஆல்யா பட் கொரோனாவால் பாதிப்பு!
- வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கும்? ரயில்வே அதிகாரிகள் தகவல்!
- கொரோனா இரண்டாவது அலையில் யாருக்கு பாதிப்பு அதிகம்? அதிர்ச்சி தகவல்
81 ஆயிரத்தை தாண்டியது தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா!
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. முன்னதாக 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் கடந்த 24 மணி நேரத்தில் 81,466 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 1,23,03,131 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 469 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,63,396 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,15,25,039 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 6,14,696 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
