திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (08:11 IST)

பாலிவுட்டை பதம் பார்க்கும் கொரோனா! – நடிகை ஆல்யா பட் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பாலிவுட் நடிகர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாலிவுட் திரை நட்சத்திரங்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் மகேஷ் பட்டின் மகளும், நடிகையுமான ஆல்யா பட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து வந்த ஆல்யா பட் ராஜமௌலி இயக்கும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார். முன்னதாக அமீர்கான், ரன்பீர் கபூர் ஆகியோருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து தற்போது ஆல்யா பட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.