வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (06:48 IST)

வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கும்? ரயில்வே அதிகாரிகள் தகவல்!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் பேருந்து ரயில் விமானம் உள்பட அனைத்து போக்குவரத்து மூலம் முடக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே 
 
ஆனால் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் பேருந்துகள் ரயில்கள் விமானம் ஆகியவை அனுமதிக்கப்பட்டன என்பதும் இருப்பினும் சிறப்பு ரயில்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வழக்கமான ரயில் சேவை எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவலை ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது சிறப்பு ரயில்கள் நூற்றுக்கணக்கில் இயக்கப்பட்டு வருவதாகவும் வழக்கமான ரயில் சேவை அடுத்த இரண்டு மாதங்களில் தொடங்க வாய்ப்பு உள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
தற்போதைய நிலையில் 66 சதவீத ரயில்கள் இயக்கப்பட்டு வருவதாகவும் அடுத்த இரண்டு மாதங்களில் வழக்கமான ரயில் சேவை அதாவது 100 சதவீத ரயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இருப்பினும் இதற்கு மாநிலங்களின் ஒப்புதல் தேவை என்றும் மாநிலங்கள் ஒப்புதல் அளித்தால்தான் 100 சதவீத ரயில்களை இயக்க முடியும் என்றும் அதே நேரத்தில் கொரோனா அதிகரித்தாலும் 100 சதவீத ரயில்களை இயக்குவதற்கு சாத்தியமில்லை என்றும் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்