திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 24 மே 2021 (16:44 IST)

இந்தியாவில் அறிமுகமாகும் கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடி கலவை… விலை 59000 ரூபாய்!

கொரோனாவுக்கு எதிராக செயல்படும் ஆண்டிபாடி கலவை மருந்தை இந்தியாவில் சிப்ளா நிறுவனம் அறிமுகப்படுத்தப் பட உள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு விதமான சிகிச்சைகள் இந்தியாவில் அளிக்கப்பட்டு வருகின்றன. தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனா வைரஸூக்கு எதிராக செயல்படும் ஆண்டிபாடிகளின் கலவை இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. ராச் நிறுவனம் தாரித்துள்ள இந்த ஆன்ட்டிபாடி காக்டெய்ல் இந்தியாவில் சிப்ளா நிறுவனம் அறிமுகப்படுத்த பட உள்ளது.

Casirivimab 600 மிலி கிராம், Imdevimab 600 மிலி கிராம் அடங்கிய 1200 மிலி கிராம் கொண்ட ஒரு டோஸின் விலை அனைத்து வரிகள் உட்பட ரூ.59,750. நிலைமை மோசமாகும் என எதிர்பார்க்கப்படும் 12 வயதுக்கு மேற்பட்டவர் 40 கிலோவுக்கு மேல் எடை உள்ளவர்களுக்கு இதை கொடுக்கலாம் என சொல்லப்படுகிறது.