கருப்பு, வெள்ளையை அடுத்து மஞ்சள்: கலர்கலராய் பயமுறுத்தும் பூஞ்சை
கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலையில் அடுத்ததாக கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, என இரண்டு புதிய நோய்கள் பரவி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே இந்த நோய் வருவதாகவும் இந்த நோய் மிகவும் ஆபத்து என்றும் மருத்துவர் வட்டாரங்கள் கூறியுள்ளன. இந்த நிலையில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையால் நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது
இந்த நிலையில் கருப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை அடுத்து தற்போது மஞ்சள் நிறப் பூஞ்சை ஒன்று பரவி வருவதாகவும் இந்தியாவில் பரவி வரும் இந்த பூஞ்சை உயிருக்கே ஆபத்தானதாக முடியுமாக இருக்கும் என்றும் கூறப்பட்டு வருவதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கொரோனாவை அடுத்து கலர் கலராக பூஞ்சைகளும் பொது மக்களை பயமுறுத்தி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது