1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 மே 2021 (16:20 IST)

அனிருத்தான் வேண்டும்… அடம்பிடிக்கும் தெலுங்கு முன்னணி நடிகர்!

தனது படத்துக்கு அனிருத்தான் இசையமைக்க வேண்டுமென ஜூனியர் என் டி ஆர் அன்புக் கட்டளை இட்டுள்ளாராம்.

தெலுங்கில் பிரபல ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளார். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரு பிரபல ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தை முடித்ததும் சுகுமார் இயக்கத்தில் ஒரு படத்தில் என் டி ஆர் நடிக்க உள்ளார். அந்த படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தான் வேண்டும் என அவர் அடம்பிடித்து ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

ஏற்கனவே அனிருத் தெலுங்கில் கேங்க் லீடர் மற்றும் ஜெர்ஸி ஆகிய படங்களுக்கு இசையமைத்து தெலுங்கு நடிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.