திங்கள், 25 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 மே 2021 (16:13 IST)

ஆலியா பட்டை சிபாரிசு செய்த நடிகர்… வருத்தத்தில் அந்த நடிகை!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தில் ஆலியா பட் ஜோடியாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படம் த மிழ் உள்பட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் கன்னட நடிகர் கிச்சா சுதீப் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கியாரா அத்வானிக்குதான் அதிகமாக இருந்தது. ஆனால் ராம்சரண் தேஜா நடிகை ஆலியா பட்டை சிபாரிசு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் கியாரா அத்வானி வாய்ப்பு பறிபோன துக்கத்தில் இருக்கிறாராம். ஆனால் ஷங்கரோ ரண்வீர் சிங்கை வைத்து இயக்கும் படத்தில் கண்டிப்பாக கியாரா அத்வானிக்கு வாய்ப்பு தருவதாகக் கூறியுள்ளாராம்.