வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 24 நவம்பர் 2018 (19:02 IST)

சமைச்சது ஒரு குற்றமா...? மனைவியை அடிச்சு துன்புறுத்திய கணவன் ...

மகாராஷ்டிராவில் உள்ள தானேவில் கணவன் அவருடைய இரண்டாவது மனைவியுடன் கூட்டு சேர்ந்து தன்னை  கொடுமை செய்வதாக மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
அதாவது கணவரும் மனைவி இருவருமே டாக்டர்கள்தான். இப்படிருக்க கணவன் தன்னிடம் பணம் கேட்டு துன்புறுத்துவதுடன், இன்னோரு பெண்ணையும் கூட சேர்த்து கொண்டு அடித்து துன்புறுத்துவதாக போலீஸில் புகார் தெரிவித்துள்ளார்.
 
மேலும் சமையல் சரியில்லை என்று கணவன் வீட்டாரும் தினமும் தொல்லை தருவதாக அப்பெண் கண்ணீர் மல்க போலீஸீல் புகார் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.