ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (15:16 IST)

உல்லாசத்திற்கு உலை வைத்த கணவன்: தோசை கல்லால் காலி செய்த மனைவி

சேலத்தில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சேலம் கருப்பூர் அருகே உள்ள உப்புகிணறு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
 
இந்நிலையில் ஐஸ்வர்யாவிற்கு அதேபகுதியில் வசித்து வந்த மெக்கானிக் ரவி என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் தனிமையில் உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
 
இதுகுறித்து அறிந்த செல்வகுமார் தன் மனைவி ஐஸ்வர்யாவை கண்டித்தார். ஆனாலும் திருந்தாத ஐஸ்வர்யா ரவி உடனான உறவை தொடர்ந்தார். மேலும் கணவனை உயிரோடு விட்டால் தங்கள் கள்ள உறவை தொடர முடியாது என நினைத்து தன் கணவனை கொல்ல திட்டமிட்டார்.
 
அதன்படி தோசை சட்டியால் கணவரின் தலையில் ஓங்கி அடித்தார் ஐஸ்வர்யா. இதில் அவர் சம்பவ இடத்திலே பலியானார். பின்னர் கள்ளக்காதலன் ரவியின் உதவியோடு செல்வகுமாரின் உடலை கிணற்றில் வீசினார் ஐஸ்வர்யா.
 
பின்னர் ஒன்றும் தெரியாதது போல ஐஸ்வர்யா தனது கணவனை காணவில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார். ஆனால் ஐஸ்வர்யா மீது சந்தேகித்த போலீஸார் அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அனைத்து உண்மைகளும் அம்பலமானது.
 
இதையடுத்து போலீஸார் கிணற்றிலிருந்த சிவக்குமாரின் உடலை மீட்டனர். மேலும் ஐஸ்வர்யாவையும், அவரது கள்ளக்காதலன் ரவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.