திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (18:09 IST)

பளார் ! பளார் ! தாசில்தாரை அறைந்த எம்.எல்.ஏ.வின் கணவர்...

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள நான்பாரா தொகுதியில் பி.ஜே.பி கட்சியின்  எம்.எல்.ஏ. மாதுரி வர்மா ஆவார். இவருடைய கணவர் திலீப் என்பவ்ரும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆவார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது ஆதரவாளர்களுடன் தன் ஊரில் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு சென்ற திலீப் அங்கு தாசில்தாருடன் வாக்குவாதத்தில் இறங்கினார்.
 
வாக்குவாதம் முற்றியதால் தாசில்தாரர் மதுசூதனனை திலீபின் ஆதரவாளர்கள் தாக்கி உள்ளனர்.
 
அதன் பின் மதுசூதனன் அளித்த புகாரின் அடிப்படையில் வன்முறையில் இறங்கிய திலீபின் ஆதரவாளர்கள் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றதாக தகவல் வெளியாகின்றன.