1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (20:07 IST)

விடுமுறை அளிக்காததால் ஆத்திரம்: உதவி ஆய்வாளரை துப்பாக்கியால் சுட்ட காவலர்

விடுமுறை கொடுக்காத ஆத்திரத்தில் உதவி ஆய்வாளர் ஒருவரை காவலர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஹானி என்ற காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார் லலித்குமார். 25 வயதான இவர் தனக்கு விடுமுறை வேண்டும் என காவல் ஆய்வாளருக்கு கடிதம் எழுதினார். ஆனால் காவல் ஆய்வாளர் கொரோனா காரணமாக இருப்பதால் விடுமுறை அளிக்கும் அதிகாரம் உதவி காவல் ஆய்வாளருக்கு அளிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் விடுமுறை விண்ணப்பத்தை பார்த்த உதவி காவல் ஆய்வாளர், லலித்குமாருக்கு விடுமுறை வழங்க முடியாது என தெரிவித்து உள்ளார். காவல் ஆய்வாளர் வந்தவுடன் அவரிடம் அனுமதி கேட்டு விடுமுறை எடுத்துக் கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார் 
 
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து மீண்ட ஆய்வாளர் இன்று மீண்டும் பணிக்கு திரும்பினார். அவரது அறைக்கு சென்ற லலித் குமார் தனது விடுமுறை குறித்து தெரிவித்துள்ளார். உடனே ஆய்வாளரும் அவருக்கு விடுமுறை வழங்கி விட்டார். இந்த நிலையில் விடுமுறை அனுமதி பெற்று வெளியே வந்த லலித்குமார் உதவி ஆய்வாளரை தகாத வார்த்தையில் பேசியதாகவும் இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை வந்ததாகவும் தெரிகிறது
 
ஒரு கட்டத்தில் லலித்குமார் திடீரென தனது பையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து உதவி ஆய்வாளரை சுட்டுள்ளார். தற்போது உதவி ஆய்வாளர் உயிருக்கு போராடி வருவதாகவும் லலித்குமார் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது