திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (13:24 IST)

அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை! – மு.க.ஸ்டாலின் வருத்தம்!

தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை பிடிக்க சென்ற காவலர் சுப்ரமணியன் மீது குண்டு வீசி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ரவுடி துரைமுத்துவை கைது செய்வதற்காக காவலர்கள் முயற்சித்தபோது நாட்டு வெடிக்குண்டு வீசப்பட்டதில் காவல்ர் சுப்ரமணியம் என்பவர் தலையில் பலத்த காயம்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 50 லட்ச ரூபாயும், தகுதி அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் காவலர் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்! அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல்- காவலர்களின் பாதுகாப்பினை தமிழகக் காவல்துறை உறுதி செய்திட வேண்டும்.” என கூறியுள்ளார்.