1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 12 ஜூலை 2018 (07:43 IST)

கின்னஸுக்கு மோடியின் பெயரை பரிந்துரைத்த காங்கிரஸ்

வெளிநாடுகளுக்கு அதிகமாக சென்ற தலைவர் மோடி என்பதனால் அவரது பெயரை கின்னஸ் புத்தகத்தில் சேர்க்க காங்கிரஸ் பரிந்துரை செய்துள்ளது.
பிரதமர் மோடி அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வது நாம் அனைவரும் அறிந்ததே. இருந்தபோதிலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விசாரித்த போது மோடி பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் அவர் 52 நாடுகளை சுற்றிப்பார்த்துள்ளார். இதற்காக 355 கோடி ரூபாய் செல்விடப்பட்டு உள்ளது. இது பலருக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது.
 
இந்நிலையில் இதுதொடர்பாக பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர், மிகவும் அதிகமான வெளிநாடுகளுக்கு சென்றவர் பிரதமர் மோடி என்பதால், அவரது பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் சேர்க்க அந்நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி பரிந்துரை கடிதம் எழுதியுள்ளது என அவர் கூறினார்.