1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 ஜூலை 2018 (22:08 IST)

சொட்டுநீர்ப்பாசனத்தை 'சிறுநீர் பாசனம்' என்று மொழி பெயர்த்த எச்.ராஜா

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னைக்கு வருகை தந்து பாஜக தொண்டர்களிடம் ஆவேசமாக பேசினார். அமித்ஷா இந்தியில் பேசியை எச்.ராஜா தமிழில் மொழிபெயர்த்தார். இந்த நிலையில்  மைக்ரோ இர்ரிகேஷன் என்ற ஆங்கில சொல்லை அமித்ஷா பயன்படுத்திய நிலையில் அதை உண்மையில் சொட்டுநீர்ப்பாசனம் என்று எச்.ராஜா மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆனால் எச்.ராஜா, 'சிறுநீர் பாசனம்' என்று மொழி பெயர்த்தார். இதனை கேட்டுக்கொண்டிருந்த பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
ஏற்கனவே எச்.ராஜா ஏதாவது சர்ச்சைக்குரிய வகையில் கூறினால் நெட்டிசன்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். இந்த 'சிறுநீர் பாசனத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள் இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இதுவரை இப்படி ஒரு பாசனத்தை கேள்விப்பட்டதே இல்லையே என்று பலர் ஆச்சரியத்துடன் கேள்வி கேட்டு வருகின்றனர். 
 
சொட்டு நீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என்று சொல்லுமளவுக்குத்தான் எச்.ராஜாவின் அறிவு இருப்பதாகவும், கூட்டத்தில் அவரின் மொழிபெயர்ப்பை கேட்ட எத்தனை பேர் வீட்டிற்கு போனதும் சிறுநீர் பாசனத்தை முயற்சி செய்து பார்க்கப்போறாங்களோ? என்றும் நெட்டிசன் ஒருவர் கூறியுள்ளார்.