செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 10 மார்ச் 2019 (07:57 IST)

ஒருவழியாக காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கிடையே உடன்பாடு!

மேற்குவங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.


 
மக்களவைத் தேர்தலில் காங்கிரசுடன் 6 தொகுதிகளில் புரிந்துணர்வு முறையில் உடன்பாடு கொள்ள மார்க்சிஸ்ட் கட்சி தயாராக இருந்த போதும் ராய்கஞ்ச் மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய தொகுதிகளில் இழுபறி நீடித்து வந்தது.
 
பிறகு இந்த இரண்டு தொகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கட்சி தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்தது. இதனையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும் பேச்சுவார்த்தை நடத்தியதால்  இப்பிரச்சனையில் சுமுகத்தீர்வு ஏற்பட்டுள்ளது .
 
அதாவது, இந்த இரண்டு தொகுதிகளிலும் போட்டியைத் தவிர்க்க,  வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி உறுதியளித்ததால், மார்க்சிஸ்ட் சார்பில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கும் மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இடையேயான பிரச்சனை தீர்ந்து தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.