வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 8 மார்ச் 2019 (09:30 IST)

காங்கிரஸ் கட்சியில் சேரும் பிரபல சுயேட்சை எம்,எல்.ஏ?

குஜராத் மாநிலத்தில் மட்டுமின்றி தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பிரபலமானவர் படேல் இன தலைவரான ஹர்திக் படேல். இவர் கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்க இவர் முடிவு செய்துள்ளதாகவும், சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு தர மறுப்பதாகவும், இதனால் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
 
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மார்ச் 12-ம் தேதி குஜராத் மாநிலத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும்போது அவரை ராகுலை  நேரில் சந்தித்து ஹர்திக் படேல் காங்கிரசில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது