காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய 'செக்க சிவந்த வானம்' பட நடிகை
தேர்தல் காலங்களில் ஒரு கட்சியில் இருந்து விலகி இன்னொரு கட்சியில் சேருவது வாடிக்கையாகி வரும் நிலையில் ''செக்க சிவந்த வானம்' படத்தில் அம்மா வேடத்தில் நடித்த நடிகை ஜெயசுதா, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
செகந்திராபாத் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ஜெயசுதா நேற்று திடீரென ஐதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு சென்று அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து அவரது கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயசுதா, 'நடைபெற இருக்கும் தேர்தலில் போட்டியிடுவது பற்றி திட்டம் எதுவும் இல்லை என்றும், தலைவர்களுடன் இணைந்து கட்சி பணியாற்றுவேன் என்றும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெற்றி பெற பிரச்சாரம் செய்வேன் என்றும் கூறினார்.
இருப்பினும் ஜெயசுதாவை முக்கிய தலைவர் ஒருவரை எதிர்த்து போட்டியிட வைக்க ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.