1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2019 (21:00 IST)

நிர்வாணமாக ஆடச் சொல்லி ராகிங் செய்த கல்லூரி மாணவர்கள்...

ஒடிஷா மாநிலம் சம்பல்பூரில் டெக்னிக்கல் யுனிவர்சிட்டி இயங்கி வருகிறது. இந்த யுனிவர்சிட்டியில் பல்லாயிரக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது ஜூனியர் மாணவர்களை நிர்வாணப்படுத்தி சீனியர் மாணவர்கள் ரேக்கிங் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஒடிசா மாநில அரசின் நிதியுதவியுடன், இந்த சுரேந்தர் சாய் டெக்னிக்கல் யுனிவர்சிட்டி இயங்கிவருகிறது. அண்மையில் இப்பல்கலைக்கழகத்தில் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் ஒரு மேடையில் உள்ளாடையுடன்  நடனம் ஆடுகின்றனர். 
 
இவர்களை இப்படி ஆடச் சொல்லி ராகிங் என்ர பெயரில் சீனியர் மாணவர்கள் அவர்களை தொந்தரவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது பரவலாகிவருகிறது. இதைப் பார்த்த அம்மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் இந்த வீடியோ குறித்த உண்மைத்தன்மை அறியும்படி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 
 
இந்நிலையில் கல்லூரி நிர்வாகம், 10 மாணவர்களை டி பார் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் உடனிருந்த  52 மாணவர்களுக்கு ரு. 2000 அபராதம் கட்ட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.