செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2019 (20:39 IST)

இறந்தவரின் உடலை துணியில் கட்டி சுமந்து சென்ற குடும்பத்தினர் !

ஒடிஷா மாநிலம் கலாஹந்தி என்ற மாவட்டத்தில் உள்ள குருபூர் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை அன்று நிகிடி என்பர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடித்து அங்குள்ள  ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
ஆனால் அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து பலனளிக்காமல் உயிரிழந்தார்.பின்னர் இறந்தவரின் உடலை கொண்டு, செல்ல மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸை கேட்டுள்ளார். மருத்துவமனை நிர்வாகமோ அதை தர மறுத்ததாகத் தெரிகிறது.
 
அதனால் மனவேதனையடைந்த குடும்பத்தினர் ,  இறந்துபோன நிகிடியின் உடலை ஒரு கொம்பில் துணியைக் கட்டிக்கொண்டு தோளில் சுமந்து சென்றனர்.
 
இதுகுறித்த தகவல் வெளியனதை அடுத்து, மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு : பிற்பகல்ம 1: 45 மணிக்கு நிகிடி இறந்தார். அப்போது மருத்துவமனையில் ஊர்தி இல்லாததால் தர இயலவில்லை என்று மருத்துவமனை தரப்பில் பதில் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.