வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (19:08 IST)

ஃபானி புயல் பாதிப்பு: ஒரு ஆண்டு சம்பளத்தை வழங்கிய முதலமைச்சர்

கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான 'பானி புயல் ஒடிஷா மாநிலத்தின் வழியே கரை கடந்ததால் அம்மாநிலத்திற்கு பெரும் சேதத்தை உருவாக்கியது. மாநில அரசு துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் உயிர்ப்பலி பெருமளவு குறைக்கப்பட்டது இருப்பினும் ஃபானி புயல் ஏற்படுத்திய பொருட்சேதம் ஆயிரக்கணக்கான கோடிகள் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஃபானி புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு முதல்கட்ட தொகையாக ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ள நிலையில் ஒரிசாவில் உள்ளவர்கள் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள நல்ல உள்ளங்கள் புயல் நிவாரண நிதியை தாராளமாக வழங்கி வருகின்றனர்.
 
இந்த நிலையில் ஃபானி புயல் பாதிப்பு நிவாரணத்திற்காக தனது ஓராண்டு சம்பளத்தை  வழங்குவதாக ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். அவருடைய அறிவிப்பை அடுத்து மாநில அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் தங்களுடைய ஒரு வருட சம்பளத்தை புயல் நிவாரண நிதியாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை புயல் வந்த எந்த மாநில முதலமைச்சரும் ஒரு வருட சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்கியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது