ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 29 மே 2019 (12:02 IST)

தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வர் ஆகும் நவீன் பட்நாயக்

ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜூ ஜனதா தளம் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஆட்சி அமைக்கிறது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஒடிசாவின் முதலமைச்சராக இருக்கும் நவீன் பட்நாயக் இந்த முறை தொடர்ந்து முதல்வராக பதவியேற்கிறார்.

மொத்தம் உள்ள 146 தொகுதிகளில் 112 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையில் ஆட்சியமைக்கிறது பிஜூ ஜனதா கட்சி. இன்று நடந்து முடிந்த பதவியேற்பு விழாவில் கவர்னர் கணேஷி லால் பதவி பிரமாணம் செய்து நவீன் பட்நாயக்கை முதல்வராக பிரமாணம் செய்து வைத்தார்.