1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (16:34 IST)

விமானத்தில் கரப்பான் பூச்சி..! பயணி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..!!

cockroach
இண்டிகோ விமானத்தில் சாப்பாட்டு வைக்கப்பட்டுள்ள பகுதியில் கரப்பான் பூச்சி இருக்கும் வீடியோவை பயணி ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
 
தனியார் துறை விமான நிறுவனமான இண்டிகோ விமானத்தில் உணவு வைத்திருக்கும் பகுதியில்' கரப்பான் பூச்சிகள் நடமாடுவதை பயணி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இதை அடுத்து அந்த வீடியோவை  சமூக வலைதளங்களில் அவர் பகிர்ந்துள்ளார்.  
 
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இண்டிகோ ஏர்லைன்ஸ்' நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ பிப்ரவரி 22 அன்று விமானப் பத்திரிகையாளர் தருண் சுக்லாவால் சமூக ஊடக தளமான 'எக்ஸ்' இல் வெளியிடப்பட்டது.


இண்டிகோ ஏர்லைன்ஸின் உணவுப் பகுதியில் கரப்பான் பூச்சிகள் எப்படி சுற்றித் திரிகின்றன என்பதை இந்த வைரல் வீடியோ காட்டுகிறது.