வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 பிப்ரவரி 2024 (16:16 IST)

ஒரு வருடமாக சிறையில் இருக்கும் மணிஷ் சிசோடியா.. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சல்யூட்..!

முன்னாள் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கடந்த ஒரு ஆண்டாக சிறையில் இருக்கும் நிலையில் சட்டமன்றத்தில் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அவருக்காக சல்யூட் அடித்துள்ளனர்

மதுபான கொள்கை முறையீடு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளால் டெல்லியின் முன்னாள் முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்

கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில் இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. பலமுறை அவர் ஜாமீன் மனு தாக்கல் செய்தும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்பதும் நீதிமன்ற காவலும் அடுத்தடுத்து நீடிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக மணிஷ் சிசோடியா சிறையில் இருக்கும் நிலையில் டெல்லி சட்டமன்றத்தில் இன்று அவருக்காக ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சல்யூட் செய்தனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகாத்மா காந்தியின் சமாதிக்கு சென்று இன்று மரியாதை செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran