வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (15:19 IST)

தனியார் ஓட்டலில் வாங்கிய உணவில் கரப்பான்பூச்சி

cockroach in  food
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் உணவகத்தில் வாங்கிய உணவில் கிடந்த கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீப காலமாக தமிழகத்தில் உள்ள தனியார் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில். சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள், குளிர்சாதன பெட்டி, சமையல் பொருட்கள், சமையலறை உள்ளிட்டவற்றை மீடியாக்கள் மூலம் தெரியப்படுத்தி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
 
இந்த நிலையில், கோவையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் வாங்கிய  உணவில் கரப்பான் பூச்சி கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பிரபல தனியார் உணவகத்தில் இருந்து வாங்கி வந்த பார்சலை பிரித்த பார்த்ததும் உள்ளே கரப்பான் பூச்சி இருந்துள்ளது. இதுகுறித்து உணவக ஊழியர்கள் முறையாகப் பதிலளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும்,இந்த உணவை சாப்பிட்ட 2 பெண்களுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.