ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 14 பிப்ரவரி 2024 (10:06 IST)

விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு நட்டு ..பயணி அதிர்ச்சி

Flight
இண்டிகோ விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் இரும்பு நட்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகில் பன்னாட்டு விமானங்களிலும் சரி, உள்ளூர் விமானங்களிலும் சரி எதாவதும் அடிக்கடி சர்ச்சைகள் எழுந்து வருகிறது.

அதன்படி, பெங்களூரு-ல் இருந்து சென்னை நோக்கி இண்டிகோ என்ற விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

இந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட  உணவில் இரும்பு நட்டு இருந்ததாக அவர் புகார் அளித்திருந்தார்.

இண்டிகோ விமானத்தில் அந்த பயணி முறையிட்ட நிலையில், விமானத்தில் இருந்து இறங்கிய பிறகு தாங்கள் வழங்கிய உணவை உட்கொண்டதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று விமான நிறுவனம் கூறியதாக பயணி தெரிவித்துள்ளார்.