ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (14:57 IST)

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்

hindi
இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தியில் சான்றிதழ் படிப்புகளை மேற்கொள்கிறார்கள் என ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் அருண்குமார் தெரிவித்துள்ளார்.
 
நேற்று மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, "இந்தி எதிர்ப்பு உள்ள தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தியில் சான்றிதழ் படிக்கின்றனர். எனவே, அந்த விஷயத்தில் நாம் கவலைப்பட தேவையில்லை," என்று அவர் கூறினார்.
 
தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள மும்மொழி கொள்கையை ஏற்க தமிழ்நாடு மறுப்பதால் தான் மத்திய அரசு நிதி மறுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
 
மேலும், "ஹிந்தியை படிப்படியாக தேசிய மொழியாக முன்னேற்ற வேண்டும். அந்த செயல்முறை இயற்கையாக இருக்க வேண்டும். கட்டாயப்படுத்தினால் எதிர்வினை ஏற்படும். சுயநல நோக்கங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை," என்றும் அவர் கூறினார்.
 
ஆங்கிலம் ஒரு பொதுவான தேசிய மொழியாக மாற்றப்பட்டால் மாநில மொழிகளின் இருப்பு ஆபத்தில் இருக்கும் என்றும், "நீங்கள் ஹிந்தியை விரும்பவில்லை என்றால் உங்களுக்கு ஒரு தேசிய மொழி இருக்க வேண்டும். ஆங்கிலம் பொதுவான தேசிய மொழியாக இருக்க முடியாது. அது ஒரு வெளிநாட்டு மொழி," என்றும் அவர் கூறினார்.

Edited by Siva