ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 ஜனவரி 2024 (12:38 IST)

டெல்லிக்கு பதிலாக மும்பை சென்ற விமானம்! – ஓடுபாதையில் அமர்ந்து தர்ணா செய்த பயணிகள்!

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் சிலர் விமான ஓடுதளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கடந்த சில காலமாக டெல்லியில் பனி மூட்டம் அதிகமாக இருப்பதால் விமானங்கள் வந்து செல்வதில் பெரும் இடர்பாடுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இண்டிகோ விமானம் ஒன்று கோவாவில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு டெல்லி சென்றது. ஆனால் டெல்லியில் மோசமான வானிலை காரணமாக அந்த விமானம் மும்பைக்கு திருப்பிவிடப்பட்டது.

இதனால் பயணிகள் கோபத்தில் ஆழ்ந்தனர். மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் அந்த விமானம் வந்து நின்ற நிலையில் அதிலிருந்து இறங்கிய பயணிகள் நேராக ஓடுதளத்திற்கு சென்று அங்கு அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளனர். இதை பார்த்து விமான நிலைய பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களை அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் பயணிகள் எழுந்து வர மறுத்துள்ளனர்.


பின்னர் அங்கு வந்த விமான நிலைய அதிகாரிகள் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகர்யத்திற்கு மன்னிப்பு கேட்டு அவர்களை சாந்தப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் மும்பை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு எழுந்துள்ளது.

Edit by Prasanth.K